சிரியாவில் கைச்சாத்திடப்பட்டுள்ள முக்கிய ஒப்பந்தம்
சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹ்மது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்திற்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கு சிரியாவில் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வந்த குர்திஷ் படைகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்தும் படிப்படியாக சிரிய அரசுடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் சிரியா மீண்டும் ஒரு ஒருங்கிணைந்த நாடாக உருவெடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக குர்திஷ் SDF படைகள் கலைக்கப்பட்டு, அதன் வீரர்கள் சிரிய தேசிய இராணுவத்தில் இணைக்கப்படுவர்.
இராணுவப் பிரிவு
இதற்காக மூன்று பிரிகேடியர்களைக் கொண்ட ஒரு தனி இராணுவப் பிரிவு உருவாக்கப்படும். குர்திஷ் பகுதிகளில் உள்ள சிவில் நிர்வாக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இனி சிரிய மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சிரியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயலான 'அல்-ஓமர்' (Al-Omar oil field), எரிவாயு நிலையங்கள் மற்றும் எல்லைக் கடப்புகள் அனைத்தும் மீண்டும் அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சிரிய வரலாற்றில் முதல்முறையாக, குர்திஷ் மொழி ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடற்றவர்களாக இருந்த குர்திஷ் மக்களுக்குக் குடியுரிமை வழங்கவும், 'நவ்ரூஸ்' (Nowruz) பண்டிகையைத் தேசிய விடுமுறையாக அறிவிக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை, "சிரியாவின் தேசிய நல்லிணக்கப் பாதையில் ஒரு மைல்கல்" என்று அமெரிக்கத் தூதுவர் டாம் பாரக் (Tom Barrack) பாராட்டியுள்ளார். 2024 டிசம்பரில் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவை மீண்டும் கட்டமைக்க எடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri