உண்மைகளை அம்பலப்படுத்த தயாராகும் மகிந்த - வெளியான தகவல்
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானம் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். இதனையடுத்து நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 16 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல நீதிமன்றம் தடைவித்துள்ளமையும் குறிப்பித்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்! திடீர் பணவரவு யார் யாருக்கு தெரியுமா? Manithan

லண்டனில் 26 வயது இலங்கை பெண்ணிற்கு நடந்த ஆச்சரியம்! கனவுல கூட நினைச்சு பார்க்கல என மகிழ்ச்சி News Lankasri

விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு! என்ன தெரியுமா Cineulagam

சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய உணவகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri

செம பிட்டான லுக்கில் நடிகர் அஜித் ! தனது ரசிகர்கருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. Cineulagam
