மகிந்தவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உச்சத்தில் வைத்த சிங்கள மக்களே விரட்டிய கொடுமை (VIDEO)
இலங்கை வரலாற்றில் ராஜபக்சக்களை அசைத்துவிட முடியாது என்கிற பெரும் நம்பிக்கை இரண்டே ஆண்டுகளில் தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது.
உலக நாடுகளின் உதவியுடன் விடுதலை புலிகளுடனான போரில் வெற்றிப்பெற்றதாக இலங்கை சிங்கள மக்களின் பேரரசனாக மகிந்த ராஜபக்ச உயர்த்தப்பட்டார்.
வரலாற்று நெடுங்கிலும் வெற்றி வாகை சூடி வந்த சிங்கள மன்னர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டார். தமிழ் மன்னனாக எல்லாள மன்னனை தோற்கடித்து சிங்கள பௌத்தத்தை தலை நிமிரச் செய்த துட்டகைமுனுவின் மறு அவதாரமாக பார்க்கப்பட்டார். இலங்கையில் ராஜபக்ச குடும்பமே சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றும் மீட்பர்களாக காட்சியளித்தனர்.
விடுதலைப் புலிகளை தோற்கடித்த மாவீரன் என்று பெரும்பான்மை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று திடீரென மாயமாகி பதுங்கி வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடவுளாக போற்றிய சிங்கள மக்கள் மத்தியில் எதிரியாக மாறிவிட்டார். அவரை மறு பிறவி எடுத்து வந்த துட்டகைமுனு மன்னன் என்றே இலங்கை மக்கள் கருதினார்கள்.
இதுவரையிலும் ராஜபக்ச சகோதரர்கள் ஒன்றாகவே இருந்துள்ளனர். ஆனால் இம்முறை அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையிலிருந்து பொது மக்கள் இன்னும் மீளவில்லை. பல அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொது இடங்களில் தோன்றுவதையும் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அழிந்து போன ஒரு சாம்ராஜ்யமாக ராஜபக்சக்களின் ஆட்சி மாறிவிட்டது. ராஜபக்சக்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் ஓர் சிறப்பு பார்வை.