தனியார் ஊழியர்களுக்கான விசேட விடுமுறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் புதன்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தனியார் துறையினரிடமும் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு சில நிறுவனங்கள் பதிலளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், புதன்கிழமையன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு தனியார் துறையினரை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, சில தனியார் நிறுவனங்கள் இதற்குப் பதிலளித்துள்ளன. இதற்கிடையில், புதன்கிழமையன்று பொதுப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.
தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் நிறுவன ஊழியர்கள் நிறுவன அடிப்படையில் ஒரு பொதுப் போக்குவரத்து முறையைச் செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam