பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்(Photo)
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
இதேவேளை, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விஷ்வரூபம் எடுத்து அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் அரசியலுக்குள்ளும், வெளியிலும் வலுப்பெற்று வந்தன.
இந்தநிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கடும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்ட நியைில் தற்போது அவர் பதவி விலகியுள்ளதாக அறிய முடிகின்றது.
அழுத்தங்களுக்கு பயந்து தான் பதவி விலகப் போவதில்லை என இதற்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்த நிலையில், உட்கட்சி மோதல்கள் அதிகரித்திருந்தன.
இன்றைய தினம் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் மகிந்தவிற்கு ஆதரவானவர்களால் கலவரங்கள் உருவாக்கப்பட்டன.
கொழும்பு காலி முகத்திடல் முழுதும் கலவர பூமியாக மாறியதை அடுத்து தற்போது மகிந்தவின் ராஜினாமா செய்தி வெளிவந்துள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri