படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!
புதிய இணைப்பு
படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே லாரிஜானியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி லாரிஜானியின் கையெழுத்துக் குறிப்பு ஒன்று அவரது எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரானின் அரச தரப்பிலிருந்து இதற்கு எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்களாலும் பகிரப்பட்ட இந்தக் குறிப்பில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளை நினைவுகூர்கிறது எனவும், அவர்களின் இறுதிச் சடங்கு தொடர்பிலும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
به مناسبت مراسم تشییع سلحشوران نیروی دریایی ارتش جمهوری اسلامی ایران: یاد آنان همواره در قلب ملت ایران خواهد بود و این شهادتها بنیان ارتش جمهوری اسلامی را برای سالها در ساختار نیروهای مسلح استوار مینماید. ازخداوند متعال علو درجات برای این شهدای عزیز خواستارم. pic.twitter.com/dvTdhyDYbY
— Ali Larijani | علی لاریجانی (@alilarijani_ir) March 17, 2026
இரண்டாம் இணைப்பு
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறவித்துள்ளார்.
அதேநேரம், ஈரான் தரப்பிலிருந்து அலி லாரிஜானியின் மரணம் தொடர்பில் எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
முதலாம் இணைப்பு
இஸ்ரேலிய படை, இரவு நடத்திய விமானத் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவற்படையின் பசிஜ் பிரிவு தலைவர் கோலாம்ரெஜா சுலைமானி பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானியை இலக்கு வைத்து இஸ்ரேல் இரவு விமானத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அவர் உயிருடன் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விமானத் தாக்குதல்
ஈரானிய பாதுகாப்பு பிரிவான பசிஜ் அமைப்பால் அமைக்கப்பட்ட ஒரு கூடார முகாமில் இருந்தபோது தலைவர் கோலாம்ரெஜா சுலைமானி குறிவைக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, துணை இராணுவப் படையின் பல தலைமையகங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்திய பின்னர், பசிஜ் இந்த முகாமை அமைத்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் பசிஜ் அமைப்பின் துணைத் தளபதி மற்றும் துணை ராணுவப் படையின் பிற உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது.
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam