திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில், திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சொகுசு கார் ஒன்றை சேருநுவர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
குறித்த நடவடிக்கையானது நேற்று (19.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சொகுசு கார்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக் கூறப்படும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சொகுசு காரை அடிப்படையாகக் கொண்டு, மாடுகள் திருட்டுச் சம்பவத்துடன் குறித்த வாகனத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.