கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது
கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர் கைது
பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
you may like this video