ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனக் குழு பங்கேற்க விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வலியுறுத்தல்
ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர சேவையின் பேச்சாளர் அன்வர் எல் அனூனி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பதிவுசெய்யப்பட்ட காணொளி செய்தி மூலமாக உரையாற்றுவதற்கு ஐ.நா பொதுச் சபை அண்மையில் வாக்களித்து அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நாவின் பணிகளில் பாலஸ்தீனம் முழுமையாகப் பங்கேற்பதைப் பாதிக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
விசா தடை
பாலஸ்தீன அதிகாரசபையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) அமைதி முயற்சிகளை சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த விசா தடையை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாலஸ்தீன அரசுக்கான சர்வதேச அங்கீகாரத்தை வலியுறுத்தவும் இரு-நாட்டுத் தீர்வை மீண்டும் முன்னெடுக்கவும் இம்முறை காணொளி வாயிலாக ஜனாதிபதி அப்பாஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.