சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
சவூதி அரேபிய இராச்சியத்தில் சட்ட நடவடிக்கை
சவூதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனான ஒருங்கிணைப்புடனும் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்