ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான லொறி
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று கந்தளாய் சூரியபுற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுற எல்லைப்பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (07) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது
மேலதிக விசாரணை
சம்பவத்தின் போது சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்கம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
லொறியில் சாரதி மட்டுமே இருந்ததாகவும், அவருக்கு உயிர் ஆபத்தில்லாத வகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பயணமான இந்த லொறி, நேற்று மாலை கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளில் பொருட்களை இறக்கிவிட்டு, சேருநுவர வழியாக கந்தளாய் நோக்கி சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பல லட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பொருட்கள் ஆற்றில் மூழ்கி கடுமையாக சேதமடைந்துள்ளன.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
