மின்னல் தாக்கி வீடு தீக்கிரை- வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்
அம்பாறை - இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கிய வீட்டின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக சேதம்
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மழை பெய்யத் தொடங்கியபோது, வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்னல் தாக்கியதில் வீட்டின் உள்ளே தீ பரவியுள்ளது. இதையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை - பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan