உலகக் கோப்பையில் தனியார் பங்குகளை விற்கும் திட்டம் தொடர்பில் FIFA அதிரடி அறிவிப்பு..!
உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை கைவிட்டதாக FIFA அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேற்படி அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்
FIFA அமைப்பின் முடிவு
உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20% வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் FIFA அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.

வெளி முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தனியார் பங்குத் திட்டத்தை FIFA செயல்படுத்தினால், வரவிருக்கும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கப்போவதாக UEFA எச்சரித்துள்ளது.
UEFA உலகக் கால்பந்தில் மிகவும் சக்திவாய்ந்த சங்கமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தனியார் முதலீட்டுத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 55 UEFA உறுப்பு சங்கங்கள் உலகக் கோப்பை மற்றும் FIFAவின் மற்ற அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri