மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து!
பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் வீடமைப்புக்கு உகந்த நிலப்பரப்புகளை இனங்கண்டு மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நோர்வூட் பிரதேச சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(9) நடைபெற்ற நோர்வூட் பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்த பிரேரணையை முன்வைத்தார்.
பிரேரணையை முன்வைத்து கருத்து தெரிவித்த அவர், மலையக மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கியமான உரிமை சார்ந்த பிரச்சினைகளில் காணி உரிமை முக்கிய இடம் வகிக்கின்றது.
காணி உரிமை
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறை குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு சொந்தக் காணி மற்றும் தனி வீடு என்பது சமூக மரியாதை மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அடிப்படை உரிமையாகும்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து, மக்கள் வாழ்வதற்கும் சிறு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பொருத்தமான நிலங்களை அடையாளம் கண்டு மீளப்பெறுவது அவசியம்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்களுக்கு காணி உரிமை கிடைத்தால் மட்டுமே வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு விவசாயம் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும், அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்னெடுக்கும் பல வீடமைப்புத் திட்டங்கள் நில உரிமை இல்லாத காரணத்தால் மக்களை சென்றடைய முடியாமல் போகின்றன.
மேலும், கல்வி கற்று வேறு துறைகளில் முன்னேற விரும்பும் மலையக இளைஞர்களுக்கு சொந்த நிலம் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan