ரணில் - சஜித் - நாமல் அணியின் திட்டம்.. கடுமையாக சாடும் டில்வின் சில்வா

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Tilvin silva
By Rakesh Jul 26, 2026 09:38 PM GMT
Report

நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும், "ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதிதாக ஒன்றிணையவில்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள். எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் மக்கள் அரசுடன்தான் இருக்கின்றார்கள்.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!

எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு  

அண்மைய காலத்தில் வெளிவந்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதனைத்தான் உறுதிப்படுத்துகின்றன. தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் கூட்டமாகவே எதிர்க்கட்சி காணப்படுகின்றது.

ரணில் - சஜித் - நாமல் அணியின் திட்டம்.. கடுமையாக சாடும் டில்வின் சில்வா | Sajith Ranil Namal Alliance Tilvin Critisized

இதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியால் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை. எதிர்க்கட்சியினர் தங்களை மாற்றிக்கொள்ள ஆயத்தமாக இல்லை, பழைய அரசியல் மற்றும் பழைய சிந்தனைகளையே இன்னமும் பின்பற்றுகின்றார்கள்.

கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பலருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்திருக்கக்கூடும்.

எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் நாட்டின் முன்னேற்றம் குறித்தோ அல்லது எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தோ எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை.

மாறாக, வழக்குகளில் இருந்து எவ்வாறு தப்புவது மற்றும் மீண்டும் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்பது குறித்தே பேசினார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வுகளால் அரசு ஒருபோதும் பின்வாங்காது, நாங்கள் முன்னோக்கிச் செல்லும் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

2026ஆம் ஆண்டின் உலகின் மிக பாதுகாப்பான தீவுகள்: முதலிடத்தில் உள்ள தீவு..

2026ஆம் ஆண்டின் உலகின் மிக பாதுகாப்பான தீவுகள்: முதலிடத்தில் உள்ள தீவு..

மக்களின் தீர்மானம்  

எதிர்க்கட்சியினர் பின்நோக்கிச் சென்ற போதிலும், அரசு தான் வைத்த அடியை ஒருபோதும் பின்னுக்கு வைக்காது நாட்டை கட்டியெழுப்பும் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.

ரணில் - சஜித் - நாமல் அணியின் திட்டம்.. கடுமையாக சாடும் டில்வின் சில்வா | Sajith Ranil Namal Alliance Tilvin Critisized

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எவருக்கும் பேரணி செல்லவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ முழு உரிமை உண்டு. கடந்த காலங்களைப் போல் அடக்குமுறைகள் ஏதும் பிரயோகிக்கப்பட மாட்டாது. இறுதியாக எதனை செய்வது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராகவே உள்ளது.

எனினும், சில சட்டப் பிரச்சினைகள் நிலவுகின்றன, அவை தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அது தவறான தகவல் எனின், அதனை மறுப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பல பொய்யான தகவல்களைத் தெரிவித்திருந்த போதிலும், தமக்குக் கிடைக்கும் தகவல்களை வெளியிடும் உரிமை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உண்டு." என்றார்.

ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஜெலென்ஸ்கிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஜெலென்ஸ்கிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US