இறக்குமதிக்கு வரி நீக்கம்! உள்ளூர் உற்பத்திகளுக்கு வரி விதிப்பு
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டிய அரசாங்கம்,இன்று அவற்றை நசுக்கும் வகையிலான வரிக்கொள்கையொன்ற நடைமுறைப்படுத்துவதாக ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.
நேற்றையதினம் (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'வெளிநாட்டிலிருந்து பொருள் இறக்குமதி செய்தால் வரி இல்லை. ஆனால் அதே பொருளை இலங்கையின் உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து வாங்கினால் 18 சதவீத வரி செலுத்த வேண்டும்.
வரிச் சுமை
அப்படியானால் யார் உள்ளூர் பொருட்களை வாங்க முன்வருவார்கள். ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மூலப்பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் கூடுதல் வரிச் சுமை ஏதுமில்லை.

ஆனால் அதே பெறுமதியிலான பொருளை நாட்டின் உள்ளூர் தொழில்முனைவோரிடமிருந்து வாங்கினால் 18 ஆயிரம் ரூபாய் மேலதிக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, உள்ளூர் விநியோகச் சங்கிலி முற்றாக பாதிக்கப்படுவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தங்களது சந்தையையே இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சுரேஸ் சலேவின் உடலில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள அறிகுறிகள் ..! சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வரிச் சலுகை
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்களது உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க “Deemed Exports” எனப்படும் சிறப்பு வரிச் சலுகை முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

ஏற்றுமதிக்குத் தேவையான பொதியிடல் பொருட்கள், துணிகள், ஒட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அந்த நாடுகள் ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகளை வழங்கும் நிலையில், இலங்கையில் அவ்வாறான சலுகைகள் நீக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
நாட்டுக்குத் தேவையான டொலர்களை ஈட்ட வேண்டுமெனில், முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்களை வாழ வைக்க வேண்டும். உலகச் சந்தையை நோக்கிச் செல்ல வேண்டுமானால், நம் தொழில்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டியது அவசியம்' என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan