சற்றுமுன்னர் ஷான் விஜயலால் டி சில்வா கைது - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
ஊழல் மோசடி
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊழல் மோசடி குற்றச்சாட்டடில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
YOU MAY LIKE THIS VIDEO
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan