சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்னரே சுரேஷ் சலே தான் சித்திரவதைகுள்ளாவதாக தகவல்களை வெளியிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (10 ) நாடாளுமன்றத்தில் சுரேஷ் சலே கைது விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில் ஒரு தரப்பினர் கலக்கமடைந்து கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கு அடிபணியப் போவதில்லை. சட்டத்தின் பிரகாரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 90 நாட்களில் சுரேஷ் சலே சகல மருத்துவ வசதிகளையும், சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத்தடை விதித்த பின்னர், சுரேஷ் சலே எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் சித்திரவதைகுள்ளாவதாகவும் குறிப்பிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam