கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் டொலர் (சுமார் 890 மில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது ஷொப்பிங், சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பிளே ஸ்டோர் மூலம் பிற ஆப் உருவாக்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை நேரடியாக வழங்குவதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துச் செயல்படுவதாகவும், அமெரிக்கா ஐரோப்பாவிற்கான பணப்பெட்டி அல்ல என்றும் சாடியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், விரைவில் ஐரோப்பிய பொருட்கள் மீது கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
வணிக நடைமுறைகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென் வாக்கர், இந்தத் தீர்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan