புத்தளத்தில் கொலையில் முடிந்த வாக்குவாதம்
புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில் நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின்போது காயமடைந்த சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan