ஈரான் கடற்பரப்பில் அதிரடி தாக்குதல்! பாதுகாப்பாக மீட்கப்பட்ட 28 இந்தியர்கள்
ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலில் இருந்த 28 இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
'திஷா' என்ற அந்த மசகு எண்ணெய் கப்பல் ஈரானிய கடற்பகுதிக்குள் நுழைந்தபோது, எதிரிப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து ஆபத்து குறித்த அவசர உதவிச் செய்தி அனுப்பப்பட்டது.
கப்பல் மீது தாக்குதல்
செய்தி கிடைத்தவுடனே ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதுவர் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வெளிநாட்டு கடற்படைகளின் தலையீடு குறித்து எச்சரித்துள்ள ஃபதாலி, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ராணுவப் படைகளின் வருகை இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், மாறாக பதற்றத்தையும் சீரற்ற சூழலையுமே அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam