வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் பெருந்தொகை டொலர்கள்! வெளியான தகவல்
இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் நாட்டில் வாகன இறக்குமதிச்செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் உள்ளடங்கியுள்ளது.
வாகன இறக்குமதி செலவு
இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் மொத்த வாகன இறக்குமதிச் செலவு 821.3 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த வாகன இறக்குமதிச் செலவு 194 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருந்துள்ளது.
இந்த ஆண்டு (2026) 821.3 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த வாகன இறக்குமதிச் செலவில், 621.1 மில்லியன் அமெரிக்க டொலர் தனியார் வாகன இறக்குமதிச் செலவும், மீதமுள்ள 200.2 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக வாகன இறக்குமதிச் செலவாகவும் பதிவாகியுள்ளது.
இதில், தனியார் வாகன இறக்குமதிச் செலவிற்காக 141.8 மில்லியன் அமெரிக்க டொலரும், வர்த்தக வாகன இறக்குமதிக்காக மீதமுள்ள 52.2 மில்லியன் அமெரிக்க டொலரும் செலவிடப்பட்டுள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri