இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்: இலங்கை அணிக்கு இரட்டை பின்னடைவு
இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.
2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் (Hamstring) காயமும், பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது.
தொடரிலிருந்து விலகிய இரு போட்டியாளர்கள்
இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில் (Rehabilitation) ஈடுபட்டு வரும் நிலையில், இப்போட்டித் தொடருக்குள் அவர்களால் முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி, குசல் மெண்டிஸ்க்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும், பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.
இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri