விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04.09.2026) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வறண்ட காலநிலை
வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan