சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை பயன்படுத்த கெஹெலிய மறுப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த மறுத்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்துகளை மாத்திரம் தான் பயன்படுத்த விரும்புவதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தனியார் வைத்தியசாலைக்கு சென்று தான் சிகிச்சைப்பெற விரும்புவதாகவும் தெரிவித்ததாக ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.
மருந்து கொள்வனவு மோசடி
இதேவேளை, மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது.
மேலும், அவரை அமைச்சரவையில் வைத்திருந்தால் எதிர்கால விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சர்வதேச ரீதியிலும் நாட்டின் அமைச்சரவை மீது அதிருப்தி ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |