நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரமற்ற தடுப்பூசி செலுத்த வேண்டும்: ஜனக ரத்நாயக்க காட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெஹலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த தரமற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என ஜனக ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (05.02.2024) காலை, கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பொதுமக்கள் கோரும் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புமிக்க தீர்ப்பு
அவர் மேலும் கூறுகையில், “அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதோடு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுமக்களும் அவர் தொடர்பில் சிறந்த முடிவை எடுப்பார்கள்.
இதற்கமைய தேசிய சிவில் அமைப்பு முன்னணி மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைந்து கெஹலியவுக்கு எதிரான கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அத்தோடு கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும்.
மேலும், கெஹலியவைப் பாதுகாப்பதற்காக முன்னின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்” என்றார்.

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
