நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டம்

Sri Lanka Police Human Rights Council Jaffna University of Jaffna Crime
By Theepan Feb 05, 2024 07:07 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன், எனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ் பல்கலைக்கழககத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற பொலிஸார்  வழிமறித்துள்ளனர்.

வழிமறித்த பொலிஸார்  நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். நீங்கள் போக்குவரத்து பொலிஸார் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன்.

சரமாரியாக தாக்குதல்

இந்நிலையில் திடீரென அங்கு வந்த சிவில் உடை தரித்த பொலிஸார் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர். இதனை காணொளியும் எடுத்தேன்.

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டம் | University Student Attack By Police In Jaffna

பின்னர் அவர்கள் தொலைபேசியினையும் பறித்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். அறையினுள் பொலிஸார் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொளியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர்.

நான் மறுத்தேன், மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள். இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர்.

சிசிடிவி காணொளி

எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர்.

நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்றனர்! பொலிஸாரிடமிருந்து காப்பாற்றுங்கள் - பல்கலை மாணவன் மன்றாட்டம் | University Student Attack By Police In Jaffna

அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்த செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார். இந்நிலையில் வீதியில் தாக்கியபோது கடையில் இருந்த இருந்த சிசிடிவி காணொளியை அழிப்பதற்காக பொலிஸார் அனைவரும் சென்றுவிட்டனர்.

அடிக்கு பயந்து இருந்த நான் அலெக்ஸ்க்கு நடந்த சம்பவத்தை நினைத்து பயத்தில் ஓடி வந்து விட்டேன். தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன்.

இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

யாழில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது

யாழில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது

கிளிநொச்சியில் பொலிஸாரது அராஜகம்: சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு

கிளிநொச்சியில் பொலிஸாரது அராஜகம்: சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு

இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்ட துயரம்! பொலிஸாரின் கொடூரம் - சிறீதரன் பரபரப்பு தகவல்

இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்ட துயரம்! பொலிஸாரின் கொடூரம் - சிறீதரன் பரபரப்பு தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US