கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைத்து விட்டது! தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி
இலங்கையில் மின்சாரக் கதிரை கதை கூறி ராஜபக்சக்கள் அரசியல் நடத்தியது போல் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவு விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளார். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது." என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,"கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை.
கச்சத்தீவு விவகாரம்
ஏனெனில் தமிழகத்தில் எழும் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதற்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்படலாம்.

தமிழக முதலமைச்சருக்கு மகிந்த ராஜபக்ச போல் மின்சாரக் கதிரையை வைத்து அரசியல் நடத்தும் சூழ்நிலை இல்லை.
எனவே, தமிழக முதலமைச்சர் உட்பட தமிழகத் தலைவர்கள் கச்சத்தீவு விவகாரத்தை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது."என அமைச்சர் தெரிவித்தார்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam