நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலை
இதன்படி, நாளை (12.09.2026) பகல் வேளையில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலைக்கு உயர்வடையக் கூடும்.
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுகிறது. இதுவே உங்கள் உடலில் உணரப்படும் வெப்பநிலையாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெப்பத் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.