கச்சத்தீவு விடயம் தொடர்பில் கடற்தொழிலாளர்களின் நிலைப்பாடே தமிழரசு கட்சியின் நிலைப்பாடு: மாவை
கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சத்தீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார்.
எனவே இது தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன என வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்தொழிலாளர்களின் நலன்களை ஒட்டி இந்திய அரசுடன் பேச்சு
இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை இந்த நிலையில் கச்சத்தீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களை ஒட்டி இந்திய அரசுடன் பேச வேண்டும்.
அதற்கு முன்னதாக கச்சத்தீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் நாம் முதலில் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் கருத்துகளை அறிய வேண்டும்.
அவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்களுடைய முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாக கருத்துக்களைக் கூற முடியாது. அத்தோடு இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவை படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.
எனவே அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும் போது கச்சத்தீவு விடயம் பற்றியும் பேச வேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
கச்சத்தீவை கைப்பற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை - ஒரு வார்த்தை கூட பேசாத மோடி

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
