அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் - அமைச்சர் கடுமையான எச்சரிக்கை
போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் இணைத்தால் பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்.
எச்சரிக்கை
அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, அதிகளவான பேருந்து சாரதிகள் போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்ததை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan