இந்திய நிதியமைச்சருடன் கலந்துரையாடிய இலங்கைத் தூதுவர்
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது இந்திய நிதியமைச்சரின் அலுவலகத்தில் நேற்று(27) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது இருதரப்பு புரிந்துணர்வு நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாவது
அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல், இந்தியக் கடனுதவி, கடனுக்கு எரிபொருள் வழங்கல் போன்ற இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் குறித்த தூதுவர் மிலிந்த மொரகொட இதன் போது இந்திய நிதியமைச்சரிடம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் கடந்த மாதம் நிவ்யோர்க் நகரில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தின் போது இலங்கை சார்பில் வேண்டுகோள் விடுத்தமை குறித்தும் அவர் இந்திய நிதியமைச்சருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்புகளை அதிகப்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது