உக்ரைனுக்காக சர்வதேச சட்டத்தை மீறிய பைடன்! தீவிரமடையும் போர் பதற்றம்
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கண்ணிவெடிகளை ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத் திட்டங்களின் படி, கண்ணிவெடிகளை மற்றைய நாடுகளுக்கு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் இது போர் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கப்படாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பைடன் தன்னால் முடிந்த வகையில் உக்ரைனுக்கு உதவி வருகின்றார்.
நேர்மறையான நடவடிக்கை
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு ஜோ பைடனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கண்ணிவெடிகளையும் பயன்படுத்த பைடன் அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இதை ஒரு நேர்மறையான நடவடிக்கை என விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri