நீரை சேமித்து வையுங்கள்! மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கையை விடுத்த ஐரோப்பிய நாடு
மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதால் உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு சுவீடன் அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.
அந்தவகையில், சுவீடன் நாடு விடுத்துள்ள எச்சரிக்கையானது சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை
இதேவேளை, ஐரோப்பாவின் முக்கியமான மற்றும் ஏழாவது பெரிய நாடாக கருதப்படும் ஜெர்மனி நாட்டின் அரசாங்கமும் தனது குடிமக்களுக்கு மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பின்லாந்து, நோர்வே, டென்மார்க் முதலான நாடுகளும் தத்தமது மக்களை எச்சரித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுடன் ரஷ்யாவின் மீது உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதையடுத்து அணு ஆயுதத்தை பயன்படுத்த புடின் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |