ஈரான் கடல் எல்லையில் இன்று தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து கப்பல்! மூவர் காணாமல் போயுள்ளனர்
ஈரான் கடல் எல்லைக்கு அருகிலுள்ள நீர்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய தாய்லாந்து செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இன்று (11.03.2026) ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் தாய்லாந்து கொடியுடன் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவை நோக்கி பயணித்த கப்பல்
அந்த தாக்குதலில் மூன்று கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. MAYUREE NAREE Bangkok என்ற கப்பலின் முகப்பு பகுதியை தவிர்த்தே தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் மொத்தம் 23 பணியாளர்கள் பயணித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்களpல் தெரியவந்தள்ளது.

கப்பல் போக்குவரத்து தரவுகளை வழங்கும் Shipping data from MarineTraffic தகவலின்படி இந்த கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam