மாகந்துரே மதுஷின் மரணத்தில் புதிய திருப்பம்! சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ள சிஐடியினர்
2020 ஆம் ஆண்டு கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதுஷின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய கொலைச் சம்பவம் 2020 ஒக்டோபர் 20 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூடு
மதுஷ் வழங்கிய தகவலின்படி, மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் குவியலை கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உடனடியாகச் செயல்பட்ட இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொன்றனர்.

இந்த வழக்கின் விசாரணை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாகந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய முறைபாடு மற்றும் சிறப்பு கோரிக்கையை கருத்தில் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
புதிய விசாரணை
இந்த புதிய விசாரணையுடன் இணைந்து, சம்பவம் நடந்த நாளில் மதுஷ் மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் பொலிஸ் குழுவில் இருந்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடமிருந்து விரைவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

மேலும், இந்த விவகாரம் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முறைபாடு அளித்த பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை, சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்து வாக்குமூலம் பெறவும், விசாரணை நோக்கங்களுக்காக பல்வேறு ஊடகங்களிலிருந்து சம்பவத்தின் காணொளி காட்சிகளைப் பெறவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam