உக்கிரமாகும் போர்: அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் போர் நிலைமை உக்கிரமடையும் நிலையில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பொதுமக்கள் இந்த இடங்களை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் போர் மீண்டும் உக்கிரமாகி உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
முக்கிய வங்கியின் மீது தாக்குதல்
இஸ்ரேல், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரானில் உள்ள முக்கிய வங்கியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஈரான் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 'காதகம் அல் அன்பியா' என்ற பெயரில் ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது.
இந்த தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபாகரி அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri