யாழ். வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குறித்த போராட்டமானது, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை (20.09.2023) மற்றும் நாளை மறுதினம் (21.09.2023) ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும்.
எனவே அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வி. தர்சன் தெரிவித்தார்.

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
