யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டிருந்தது.
சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதவான் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை தருமாறு மூவர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.
இந்த விசாரணை குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு மேலும் 10 நாட்கள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு நீதவான ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் போதனா வைத்திய சாலை சார்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
