கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு கனேடிய அமைச்சர் கடும் கண்டனம்
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற திலீபனின் நினைவேந்தல் பேரணியில், திலீபனின் உருவப்படத்தை ஏற்றிச்சென்ற வாகனம் குழுவொன்றினால் சுற்றிவளைக்கப்பட்டு செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீதும் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
பொலிஸார் வேடிக்கை
இந்த தாக்குதலை கண்டித்துள்ள கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தாக்குதலின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
I condemn the attack on @skajendren, MP, while the police stood idly by. This speaks to the continued impunity enjoyed by those who brazenly break the law. #LKA https://t.co/2j4WMryUbC
— Gary Anandasangaree (@gary_srp) September 18, 2023
சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையற்ற சுதந்திரத்தை” இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாகவும், கனேடிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |