ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் பாரிய போராட்டம் (Photos)
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெனிவா முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்ந்து வாழக் கூடிய தமிழர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இனப் படுகொலைக்கு நீதி
தமிழர் தாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், இனப் படுகொலைக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதோடு, கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தமிழர் தாயகத்திற்காக பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தன்னுயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு இதன்போது மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.












புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam