பிரபல தனியார் வங்கியில் நடந்த பாரிய பண திருட்டு - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
பிரபல தனியார் வணிக வங்கிக்கு சொந்தமான கொம்பேங்க் டிஜிட்டல் வலைத்தளத்தை போன்ற மோசடி இணையத்தளம் மூலம் பணம் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
உடுகம்பொல பகுதியை சேர்ந்த டபிள்யூ. எம். சி. விக்ரமசிங்க என்ற வாகன தொழிலதிபர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கிலிருந்து 1,999,777.00 திருடப்பட்டதாக பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடடாளர் தனியார் வங்கியின் தலைவர்களுக்கு இது குறித்து தகவலை வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
வங்கி அமைப்பு ஊடுருவல்
வங்கியின் ஒன்லைன் வங்கி அமைப்பு ஊடுருவல் செய்யப்பட்டு, வங்கியின் டிஜிட்டல் வங்கி அமைப்பைப் போன்ற போலி விண்ணப்பங்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திலுள்ள பல முறைப்பாடுகள் தற்போது கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
வங்கியின் இணையத்தளம்
கொமர்ஷல் வங்கியின் சைபர் பாதுகாப்பு அமைப்பில் பிரச்சினை இருப்பதாக 5 மாதங்களுக்கு முன்பு ஊடகங்கள் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சமூக வலைத்தளங்களில் கொமர்ஷல் வங்கி தொடர்பில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என வங்கி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
வங்கியின் இணையத்தளம் ஊடாக பாதுகாப்பான அணுகலை மேற்கொள்ளும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மொமர்ஷல் வங்கி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri