யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் இணைக்கப்பட்ட தையல் உற்பத்தி பிரிவு(Photos)
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழ் நன்கொடையாளர் ஆறுமுகம் பொன்னம்மா ஆசிரியரின் ஞாபகார்த்தமாக அவர்களுடைய பிள்ளைகளினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி தையல் இயந்திரங்களுடன் உருவாக்கப்பட்ட தையல் உற்பத்தி பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தையல் உற்பத்தி பிரிவானது இன்று (27.10.2023) காலை 10.00 மணியளவில் பிரதம விருந்தினரான யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் பாஸ்கரராஜாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரி
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரி அபிவிருத்தியின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த பிரிவானது குறைந்த இயந்திர தளபாட வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பினும் இதன் உற்பத்திச் செயற்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கல்லூரி அபிவிருத்தி சங்கத்தினர் எண்ணியுள்ளனர் என்பதுடன் நவீன இயந்திரங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நன்கொடையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை பல்வேறு வகையான உற்பத்தி பிரிவுகளை உருவாக்க எண்ணியுள்ளதாகவும் கற்றல் செயற்பாட்டில் உள்ள மாணவர்களை உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தொழில்நுட்பவியல் கல்லூரி,மேலதிக பணிப்பாளர் சு. முகுந்தன், IBC தமிழ், லங்காஸ்ரீ, றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை பணிப்பாளர் க. பாஸ்கரன், நிறுவுனர், தியாகி அறக்கட்டளை, யாழ்ப்பாணம் தி. வாமதேவா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.










ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
