கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தேசத்தின் கடமை - ஐக்கிய நாடுகள் சபை
சிறைக் கைதிகளைத் தவறாக நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தேசத்தின் கடமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மண்டேலா விதிமுறைகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கூறியுள்ளார்.
It is the duty of the State, as per the #MandelaRules, to protect the rights of prisoners. In our work on prison reform and drug rehabilitation @UNSriLanka works to strengthen capacities to uphold the rights of all those in custody & condemns any ill treatment of #prisoners.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) September 15, 2021
இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு, அரசியல் கைதிகள் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிடச் செய்ததாக வெளியான தகவல் தொடர்பிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதிகள்! ஜனாதிபதி பதில் கூற வேண்டுமென வலியுறுத்தல்