துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதிகள்! ஜனாதிபதி பதில் கூற வேண்டுமென வலியுறுத்தல்
அநுராதபுர சிறைக்குள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நடந்து கொண்ட விதம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் இலங்கை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் அவர் இட்டுள்ள பதிவில் மேலும்,
ஒரு இராஜாங்க அமைச்சர் அநுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார்.
ஒரு ராஜாங்க அமைச்சர் #அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், #தமிழ்_கைதிகளை முழந்தாளிட செய்துள்ளார். இதொரு பாரிய #மனித_உரிமை மீறிய கிரிமினல் செயல். #பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் #LKA அரசின் வக்கிர மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி #கோதா @GotabayaR பதிலளிக்கணும். pic.twitter.com/lvWzGo8PXb
— Mano Ganesan (@ManoGanesan) September 15, 2021
இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல், ஒரு கிரிமினல் செயல்.
பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசாங்கத்தின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகிறதா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கு பதில் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளுக்கு சித்திரவதைகள் - சட்டத்தரணி சுகாஷ் எச்சரிக்கை
அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர்! கடும் விமர்சனங்கள் முன்வைப்பு