தமிழ் அரசியல் கைதிகளுக்கு சித்திரவதைகள் - சட்டத்தரணி சுகாஷ் எச்சரிக்கை
வவுனியா தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கோவிட்டை தாண்டியும் வடக்கும், கிழக்கும் கிளர்ந்தெழும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்குள் அடாத்தாகப் பிரவேசித்து தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டி முட்டுக்காலில் வைத்து சித்திரவதை செய்து மிரட்டிய ஆளுங்கட்சி சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சித்திரவதைகள் தொடர்ந்தால் கோவிட்டை தாண்டியும் வடக்கும், கிழக்கும் கிளர்ந்தெழும்.
கோவிட் காலத்தில் யாருக்கும் தெரியாமல் அரசியல் கைதிகளில் கை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி....
சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை