சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
அநுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க இராஜாங்க அமைச்சரொருவரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை, தாம் வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் இலங்கை நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
தாய் நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசாங்கத்துக்கு கடப்பாடு உள்ளது.
எனவே இந்த இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதுடன், அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுங்கள்! கூட்டமைப்பு கோரிக்கை
சிறைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய இராஜாங்க அமைச்சர்