அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுங்கள்! கூட்டமைப்பு கோரிக்கை
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரத்வத்தேவை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென கட்சி வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அவரை உடன் கைது செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவின் டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து பதிவிடப்பட்டுள்ளது.
We call on the government to immediately remove the State Minster for Prison Management and have him arrested and charged after an immediate inquiry for allegedly threatening to kill prisoners in Anuradhapura prison on Sunday 12th September
— TNAMedia (@TNAmediaoffice) September 14, 2021
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri