குற்றவாளியாகப்போகும் சலே!முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி துவான் சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அவர் இலங்கையில் இருக்கவில்லை என குறிப்பிட்ட விடயம் ஆதாரங்களுடன் பெய்யென நிரூபிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல சஹ்ரானை சலே 2018 ஆம் ஆண்டு சந்தித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிட்டதையும் அவர் மறுத்திருந்தார். கடந்த (11.03.2026) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணையில் 35 பக்க பி அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் அன்று இலங்கையில் இருந்த சலே
அதில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பதியேற்றுக் கொண்டதாகவும் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி பதவி விலகியதாகவும் குறிப்பிட்டதோடு அக்காலப்பகுதியில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பிரிகேடியர் சுரேஷ் சலே தன்னை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக்க தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்து என்னை சந்திக்க சுரேஷ் சலே விருப்புவதாகவும் அதற்கு விருப்பம் தெரிவித்தால் பெருமைக் கொள்ளவதாகவும் அவர் குறிப்பிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் அதற்கு தான் விருப்பம் தெரிவித்ததாகவும் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சலே 2018 டிசம்பர் 10 முதல் 2019 ஜனவாரி 3 ஆம் திகதி வரை தான் இலங்கையில் இருந்ததாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.