அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர்! கடும் விமர்சனங்கள் முன்வைப்பு

Srilanka Human rights United nation Political prisoners
By Independent Writer Sep 15, 2021 07:49 AM GMT
Report

அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவுமே நாம் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (15) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது, தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கருதுவதோடு இத்தகைய அநாகரிகமான செயலை மிகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது.

இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில் குறிப்பிட்ட அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி துரித விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்குவதோடு மனநல சிகிச்சையும் அளித்தல் வேண்டும்.

அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்குக் காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். இல்லையெனில் இது இலங்கை அரசும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செயல்படுகின்றது என்பதைச் சுட்டி நிற்கும். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தால் நீண்ட காலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமை விடயமாகவும் ஆராய ஆட்சியாளர் குழு நியமித்து இருப்பதாகக் கூறுவது கேலிக்கூத்தாக அமையும்.

அது மட்டுமல்ல அரசின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே அமையும். குறிப்பிட்ட அமைச்சரின் செயல்பாடு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்படுவதோடு வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறைச்சாலை கைதிகளைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுவதோடு அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றிப் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

இனவாத ஆட்சியாளர்கள் ஆசியாவின் அறிவாலயம் எரிந்து சாம்பலாக்கி இனப்படுகொலையுடனான இன அழிப்போடு நின்றுவிடாது அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் நீதி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நாட்டின் இனவாத அரசியல் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களிலும் அடக்கி ஒடுக்கும் என்பதற்கு இன்னுமொரு சாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரே சக்தியாக நின்றால் மட்டுமே எமது எதிர்காலம் காக்கப்படும்.

இச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்குக் கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US